விவேகானந்தா மகளிர் கல்லூரியில் கைத்தறி தினம்
Tiruchengode King 24x7 |7 Aug 2024 1:24 PM GMT
விவேகானந்தா மகளிர் கல்லூரியில் கைத்தறி தினம்
திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு பேஷன் டிசைனிங் துறை மற்றும் கைத்தறி துறை,கதர் கிராமத்தொழில்கள் வாரியம் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் இணைந்து நடத்திய கைத்தறி கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் தாளாளர் மற்றும் செயலர் டாக்டர் மு கருணாநிதி தலைமை தாங்கினார். விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.துளியியல் மற்றும் ஆடை அலங்கார வடிவமைப்பியல் துறையின் தலைவர் டாக்டர் அரைஸ் மேரி வரவேற்புரை வழங்கினார்.கல்லூரியின் முதல்வர் டாக்டர் பேபி சகிலா சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பழனி குமார் இணை இயக்குனர் கைத்தறி துறை திருச்செங்கோடு திருமதி. ராதா மூத்த தொழில் நுட்ப உதவியாளர், கைத்தறி துறை, திருச்செங்கோடு .திரு குமார், மேலாளர் ஆடை வடிவமைப்பு மற்றும் உற்பத்தி துறை ,கோ ஆப் டெக்ஸ், சேலம் ஆகியோர் கலந்து கொண்டு பேசும் போது இன்றைய காலசூழலில் கைத்தறிக்கு மாற்றாக விசைத்தறி மற்றும் அதிநவீன தானியங்கி தொழில்நுட்பத்துடன் கூடிய ஏர் ஜெட் தறி போன்றவைகள் இருந்தாலும் கைத்தறியில் நெய்யப்பட்ட சேலை ரகங்களும் அதன் தரமும் என்றும் குறையாது அப்படிப்பட்ட கைத்தறியில் நெய்யப்பட்ட ரகங்களை வாங்கி பயன்படுத்துவோம் என்ற உறுதிமொழியை ஏற்போம். மேலும் மாணவிகளாகிய நீங்கள் கைத்தறியை பற்றியும் அதன் பயன்பாடுகள் குறித்தும் எதிர்காலத்தில் அடுத்த தலைமுறையினர்க்கு கொண்டு செல்லவேண்டும் என்று கூறினார். இந்த கைத்தறி கண்காட்சியில் 10க்கும் மேற்ப்பட்ட விற்பனை அரங்குகளில் கைத்தறி சேலை ரகங்கள் வேட்டி சட்டைகள் மற்றும் கைத்தறி பட்டு புடவைகள் கதர் கிராமத்தொழில்கள் வாரியத்தின் தயாரிப்புகளான சோப்பு மற்றும் வாசனைத்திரவியங்கள் இடம் பெற்றன . மேலும் இந்த நிகழ்வில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு கண்காட்சியை பார்வையிட்டனர். விழாவில் கல்லூரி துணை முதல்வர் முனைவர் மேனகா , பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக பேஷன் டிசைனிங் துறையின் பேராசிரியர் மனோஜ் பிரபாகர் நன்றியுரை கூறினார். விழா ஏற்பாட்டினை பேராசிரியர் சிவ சங்கர் ஏற்பாடு செய்திருந்தார்.
Next Story