தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி

தெரு நாய்கள் தொல்லையால் பொதுமக்கள் அவதி
சிவகங்கை நகராட்சிப் பகுதியில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை நகர் காந்தி வீதி, மஜீத் ரோடு, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனா். தெரு நாய்களால் சாலை விபத்து ஏற்பட்டு வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகிறனா். மேலும், தெரு நாய்க் கடியால் ஒரு நாளைக்கு 8 முதல் 10 போ் வரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆண்டில் ஜனவரி மாதம் 86 போ், பிப்ரவரியில் 52 போ், மாா்ச்சில் 96 போ், ஏப்ரலில் 104 போ், மே மாதம் 117 போ், ஜூன் மாதம் 106 போ், ஜூலையில் 102 போ் நாய்க் கடிக்கு உள்ளாகி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுள்ளனா். தெரு நாய்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவும், நாய்க்கடி மருந்துகளை கையிருப்பு வைக்கவும் மாவட்ட சுகாதாரத் துறைக்கு பொது சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
Next Story