கள்ளக்குறிச்சியில் போர்வெல் சீரமைப்பு

கள்ளக்குறிச்சியில் போர்வெல் சீரமைப்பு
சீரமைப்பு
கள்ளக்குறிச்சியில் பழுதடைந்து பயனற்று இருந்த போர்வெல், தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால் சீரமைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி பெருமாள் கோவில் பின்புறம் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக மினிடேங்க் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மினிடேங்க் போர்வெல்லில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்து நீண்ட நாட்களாகியும் சீரமைக்கப்படவில்லை. இதனால் பயன்பாடின்றி மினிடேங்க் காட்சி பொருளாக இருந்தது. பழுதாகி இருந்த மினிடேங்க் குறித்து நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. அதன் எதிரொலியாக போர்வெல் ஸ்விட்ச்கள், மின் கேபிள்கள் மாற்றப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
Next Story