அரசு மாதிரி பள்ளி கூடுதல் கட்டுமான பணி ஆய்வு

அரசு மாதிரி பள்ளி கூடுதல் கட்டுமான பணி ஆய்வு
ஆய்வு
கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி கூடுதல் வகுப்பறை கட்டுமான பணியை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.3.70 கோடி மதிப்பில் கூடுதல் 15 வகுப்பறைகள் மற்றும் 2 ஆய்வகங்களுடன் புதிதாக கட்டடம் கட்டப்படுகிறது. இந்த கட்டுமான பணிகளை கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, பொதுப்பணித்துறை சார்பில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.19.33 கோடி மதிப்பில் நாகலுாரில் கட்டப்பட்டு வரும் அரசு மாதிரி பள்ளி கட்டடம், ரூ.56.47 கோடி மதிப்பில் 4 தளங்களுடன் தனி, தனியாக கட்டப்படும் மாணவர் மற்றும் மாணவி விடுதிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். மாணவியர் விடுதியில், தரைத்தளத்தில் 54 மாணவிகள், 1 - 3 தளங்களில் தலா 90 மாணவிகள், 4ம் தளத்தில் 68 மாணவிகளும் என மொத்தம் 392 மாணவிகள் தங்கி பயிலும் வகையிலும், 2 'லிப்ட்டுகள்', கழிப்பறை, சமையல் அறை உள்ளிட்ட வசதிகளுடனும் கட்டப்பட்டு வருகிறது. கட்டுமான பணிக்கு பயன்படுத்தும் பொருட்களின் தரம், அளவுகள், திட்ட மதிப்பீட்டின் படி கட்டப்படுகிறதா என்பது குறித்து கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ராஜேஷ் உட்பட அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
Next Story