பக்கிள் ஓடை அருகே புதிய சாலை பணிகள் : மேயர் ஆய்வு!
Thoothukudi King 24x7 |8 Aug 2024 2:41 AM GMT
தூத்துக்குடி பக்கிள் ஓடை அருகே புதிய சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
தூத்துக்குடி பக்கிள் ஓடையின் முகத்துவாரப் பகுதியில் துவங்க உள்ள புதிய சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் சாலை, வடிகால் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு வருகிறார். இந்நிலையில், தூத்துக்குடி பக்கிள் ஓடையின் முகத்துவாரப் பகுதியில் நடைபெறப் போகும் புதிய சாலை பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, திமுக செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல் ராஜ், வட்ட பிரதிநிதி மார்ஷல் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடன் சென்றனர்.
Next Story