கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தேசியகைத்தறிதினஉலகசாதனை நிகழ்வு
Tiruchengode King 24x7 |8 Aug 2024 2:42 AM GMT
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் தேசியகைத்தறிதினஉலகசாதனை நிகழ்வு
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியியல் துறையின் சார்பாக தேசிய கைத்தறிதினஉலக சாதனை நிகழ்வு கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வானது கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் ஆர். சீனிவாசன் வாழ்த்துகளோடு தொடங்கப்பட்டது. மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன் வாழ்த்துரை வழங்கினார். இளநிலை இரண்டாமாண்டு ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியியல் துறையைச் சார்ந்த மாணவி என். மைத்ரேயி வரவேற்புரை வழங்கினார். இச்சாதனை நிகழ்வில் சிறப்புவிருந்தினர்களாக நாமக்கல் மாவட்ட காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி மற்றும் வழக்கறிஞர், பத்திரத்துறை பதிவாளர் எம். தர்மலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டு கைத்தறி நெசவுசமூகம் மற்றும் நாட்டின் பொருளாதார மேம்பாடு குறித்துசிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சியில் கிராண்ட் யுனிவர்ஸ் புக் ஆஃப் ரிக்கார்ட்ஸ் நிறுவனர் எம் ஷேக் முகமது, தென்மண்டல இயக்குனர் எஸ். ஜென்சிங் ஜோ, வினோதினி, நதியா, மகேஸ்வரி மோகன் மற்றும் எஸ். சந்தியா கார்த்திகேயன் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர். தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு 100 மாணவிகள் கைத்தறி புடவையில் காலை 6.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை இடைவிடாமல் 12.00 மணி நேரத்தில் 2024 முறை கைத்தறி சின்னத்தை வரைந்து உலக சாதனை படைத்தார்கள். மேலும் தேசிய கைத்தறி தினத்தன்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 2024 முறை வரைந்த புடவையை உடுத்தி கலைத்திறன் மற்றும் பாரம்பரியமிக்க கைத்தறி தொழில் நுட்பங்களைப் பாதுகாப்பதில் மாணவிகள் தங்கள் பங்களிப்பினை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வை ஒருங்கிணைப்பு செய்த முதுகலை ஆடை வடிவமைப்பு மற்றும் துகிலியியல் துறையைச் சார்ந்த துணை முதல்வரும், துறைத்தலைவருமான முனைவர் थी. மகாலட்சுமி அவர்களையும் பேராசிரியர்களையும் மற்றும் மாணவிகளையும் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் மகளிர் கல்லூரியின் முதல்வர், பிற கல்லூரியின் முதல்வர்களும், இயக்குனர்களும், பேராசிரியர்களும் பாராட்டினார்கள். இறுதியாக இளநிலை முதலாமாண்டு நுண்ணுயிரியில் துறையைச் சார்ந்த மாணவி பி. ஜே. இவாஞ்சலின் நன்றியுரை வழங்கினார்.
Next Story