போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பான கூட்டம்.
Perambalur King 24x7 |8 Aug 2024 4:44 AM GMT
கூட்டம்
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் தலைமையில், போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு எனும் இலக்கை அடையும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பான மாவட்ட அளவிலான முன்னேற்பாடு பணிகளுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தபோது, போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து இணையவழியாக காட்சிபடுத்தி பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகளும் உறுதிமொழி ஏற்க தேவையான நடவடிக்கைகளை அனைத்து அரசு மற்றும் தனியார் கல்லூரி முதல்வர்கள் மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும். பெரம்பலூர் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்திடவும், அனைத்து ஊராட்சி தலைவர்களை கொண்டு ஒவ்வொரு ஊராட்சியிலும் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களிடையேயும், மாணவர்களிடையேயும் ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தை போதை பொருட்கள் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். என தெரிவித்தார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, சார் ஆட்சியர் கோகுல் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்
Next Story