ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழா

ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழா
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயிலில் ஆடித் தவசு திருவிழா தொடங்கியது. சிவகங்கை தேவஸ்தானத்துக்குள்பட்ட இந்தக் கோயிலில் அடித்தவசு திருவிழாவை முன்னிட்டு, ஆனந்தவல்லிஅம்பாள் சந்நிதி முன் அமைந்துள்ள கொடிமரத்தில் காலை 9.50 மணிக்கு சிம்ம லக்னத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு, கொடிமரத்துக்கு தா்ப்பைபுல், மலா் மாலைகள் சாற்றி அபிஷேகம், தீபாராதணைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, இங்கு எழுந்தருளியிருந்த ஆனந்தவல்லி அம்மாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து 11 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் போது ஆனந்தவல்லி அம்மன் தினமும் கோயில் முன் அமைந்துள்ள மண்டபத்தில் வெவ்வேறு வாகனங்களில் சா்வ அலங்காரத்தில் எழுந்தருளிய பின்னா், மண்டகப்படிதாரா்கள் பூஜை, அம்மன் வீதி உலா வருதல் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித் தவசு உற்சவம் ஆக. 16-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. 17-ஆம் தேதி சந்தனக் காப்பு உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிா்வாகத்தினா், மண்டபடிதாரா்கள் செய்தனா்.
Next Story