ஆக்கிரமிப்பு செய்த கடைகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்

சோத்துப்பாக்கம் சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக ஆக்கிரமிப்பு செய்த கடைகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர்
சோத்துப்பாக்கம் சாலையில் பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக ஆக்கிரமிப்பு செய்த கடைகளை நெடுஞ்சாலை துறையினர் அகற்றினர். திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சோத்துப்பாக்கம் சாலையில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் அதற்கான பணி நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் ராமச்சந்திரன் மேற்பார்வையில் துவங்கப்பட்டது. இருப்பினும் சாலையின் இருபுறமும் 200-க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்ததால் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ராமச்சந்திரன் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் கொண்டு சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த பகுதிகளை இடிக்கும் பணி நடைபெற்றது. மேலும் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த பகுதிகளை இடிக்கும்போது கடையின் உரிமையாளர்களுக்கும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து செங்குன்றம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு முன்னதாகவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் இதற்கான நோட்டீஸ் வழங்கியுள்ளதாக தெரிவித்ததன் பேரில் காவல்துறை உதவியோடு நெடுஞ்சாலை துறை அதிகாரி ராமச்சந்திரன் முன்னிலையில் ஆக்கிரமிப்பு செய்த பகுதிகளை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றதால் அப்பகுதியில் பரபரப்பு சூழலே ஏற்பட்டது.
Next Story