அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் சார்பில் மாணவர்களுக்கு
Salem (west) King 24x7 |8 Aug 2024 7:11 AM GMT
வேலை வாய்ப்பிற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி
விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் வேலைவாய்ப்பு அமைப்பு மூலம் கண் ஒளியியல் பிரிவு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர். கணேசன் வழிகாட்டுதலின்படி கல்லூரி வளாகத்தில் லென்ஸ்கார்ட் நிறுவனத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. வேலைவாய்ப்பு அமைப்பின் அதிகாரியும், கண் ஒளியியல் பிரிவின் பொறுப்பாளருமான பேராசிரியை தமிழ்சுடர் வரவேற்றார். துறையின் டீன் பேராசிரியர் டாக்டர். செந்தில்குமார் தலைமை தாங்கி சிறந்த வேலைவாய்ப்பினை பெறுவதற்கு மாணவர்கள் துறை சார்ந்த திறனை வளர்த்து கொள்வதன் அவசியம் குறித்து பேசினார். சிறப்பு அழைப்பாளர்களாக சேலம் மண்டல லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் தலைவர் பாலாஜிராகவன், கண் ஒளியியலாளர் இம்ரான் ஆகியோர் பங்கேற்று வருங்கால கண் ஒளியியல் பிரிவில் வேலைவாய்ப்புகள் குறித்தும், அதனை தேர்வு செய்வதில் கையாளும் முறைகள், வளர்ந்து கொள்ள வேண்டிய திறன்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கி கூறினார். இதில் துறையின் கண் ஒளியியல் பிரிவு மாணவர்கள் பங்கேற்று பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை உதவி பேராசிரியர்கள் சவுந்தர்யா, ராம்பிரசாத், திவ்யா, மெய்பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story