அரியானூர் முதல் ஆட்டையாம்பட்டி வரை மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணிகள்
Salem (west) King 24x7 |8 Aug 2024 7:14 AM GMT
பாலங்கள் பராமரிப்பு மாதத்தை யொட்டி
தமிழக நெடுஞ்சாலைத்துறையில் ஆகஸ்டு மாதம் ‘‘பாலங்கள் பராமரிப்பு மாதமாக" கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்போது பாலங்களை பராமரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு சேலம் கண்காணிப்பு பொறியாளர் சசிக்குமார், கோட்டப்பொறியாளர் முத்துக்குமார் ஆகியோர்களின் அறிவுறுத்தலின்படி சேலம் மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்களில் நீரோட்ட பாதைகள் மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய்களை சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, அரியானூர் முதல் ஆட்டையாம்பட்டி வரை மாநில நெடுஞ்சாலையில் உள்ள சிறுபாலங்களின் நீரோட்ட பாதைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை உதவி கோட்டப்பொறியாளர் சந்தோஷ்குமார், உதவி பொறியாளர் பிரதீப் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த பணிகள் பொக்லைன் எந்திரம் மூலமாக நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் மழைநீர் தேங்குவது தடுக்கப்பட்டு, மழைக்காலங்களில் பாதிப்பின்றி போக்குவரத்து சேவை நடைபெற உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story