ஆடி பூரம் பாண்டமங்கலம் அரசாயி அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை.

X
Paramathi Velur King 24x7 |8 Aug 2024 1:37 PM ISTபரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் அரசாயி அங்காளம்மன் கோயிலில் ஆடி பூரம் சிறப்பு பூஜை நடைபெற்றது.
பரமத்தி வேலூர் வேலூர் வட்டம் பாண்டமங்கலம் அரசாயி அம்மன் கோயிலில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலில் ஆடி பூரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து வண்ணமலர்கள் கொண்டும் வண்ண வண்ண வலையல்கள் கொண்டும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
Next Story
