நில உரிமையை தீர்மானிக்க வருவாய்த் துறைக்கு அதிகாரம் இல்லை- ஈசன் முருகசாமி விளக்கம்.

நில உரிமையை தீர்மானிக்க வருவாய்த் துறைக்கு அதிகாரம் இல்லை- ஈசன் முருகசாமி விளக்கம்.
நில உரிமையை தீர்மானிக்க வருவாய்த் துறைக்கு அதிகாரம் இல்லை- ஈசன் முருகசாமி விளக்கம். இனாம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு, மனை உரிமையாளர்கள் இயக்கம் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், தமிழக விவசாயிகள் சங்க நிறுவனத் தலைவர், வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து, இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒன்று கூடினர். காவல்துறையினர் அவர்களை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காத்திருக்கும் போராட்டத்தை நடத்திக் கொள்ள கூறிவிட்டதால், மேற்கண்ட அமைப்பைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்திற்காக ஒன்று கூடினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பொதுமக்கள் பேசிய, வழக்கறிஞர் ஈசன் முருகசாமி, நூறு வருடங்களுக்கு மேலாக, முறையாக அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதலின்படி முத்திரை தீர்வை, வரி உள்ளிட்டவற்றை செலுத்தி பல வருடங்களாக சொத்தை சுவாதீனத்தில் வைத்து பராமரித்து வரும் சூழலில், ஆர்டிஓ நமக்கு எதிராக பட்டவை ரத்து செய்துள்ளது ஏற்கத் தகுந்தது அல்ல எனவும், ஏற்கனவே பலமுறை உயர்நீதிமன்றங்களில் நில உரிமையை தீர்மானிக்க வருவாய்த் துறைக்கு அதிகாரம் இல்லை என வழங்கப்பட்ட தீர்ப்பை மேற்கோள் காட்டி விளக்கி பேசினார். போராட்டத்தில் ஈடுபட்ட, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வழக்கறிஞர் கூறிய கருத்துக்களுக்கு வரவேற்பு தெரிவித்தனர்.
Next Story