சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிறற

சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிறற
திருத்தேர் விழா பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்
சேலம் அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த மாதம் 23ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது நாள்தோறும் அம்மனுக்கு பல்வேறு விதமான சிறப்பு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்று வந்தன. நேற்று அம்மனுக்கு பொங்கல் வைத்தல், அக்னி கரகம், அழகு குத்துதல் உள்ளிட்ட பல்வேறு வைபவங்கள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வான செங்குந்தர் மாரியம்மன் திருத்தேர் விழா இன்று நடந்தது. முன்னதாக அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பட்டாடை உடுத்தி தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு வண்ண மலர்களைக் கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. வேதங்கள் முழங்க அர்ச்சனைகள் நடைபெற்றன. பின்னர் திருத்தேர் வைபவத்தில் கலந்து கொண்ட ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். இந்த தேர் அம்மாபேட்டை பகுதியில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு அர்ச்சனைகள் செய்யப்பட்டு மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் தரிசனம் செய்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன .
Next Story