சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்

சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில்
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஆலோசனை
தமிழக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் ஆசிர்வாதம் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினவ் துணை ஆணையாளர் மற்றும் உதவி ஆணையாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஏடிஜிபி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில் சேலம் மாநகரில் சட்டம் ஒழுங்கு குறித்தும் சமீபத்தில் நடந்த அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கு குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். தொடர்ந்து மாநகரில் பல்வேறு பகுதிகளில் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக தகவல்கள் உள்ளன விற்பனையை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு உள்ளார்களா? என்றும் திமுக கவுன்சிலர் தொடர்ந்து தலைமறைவாக இருக்க காரணம் என்ன என்பது குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டு அறிந்தார். மேலும் திமுக பிரமுகர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர் ஆஸ்திரேலியா வாலிபரை பணம் கேட்டு கடத்தி தாக்கிய சம்பவம் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் ரவுடிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார். மேலும் மாநகரில் போதை ஊசி மற்றும் போதை மாத்திரை கலாச்சாரம் அதிகரித்து உள்ளது அதனை தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
Next Story