கரூரில்,டிஆர்ஓ உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நில உடமையாளர்கள்.

கரூரில்,டிஆர்ஓ உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நில உடமையாளர்கள்.
கரூரில்,டிஆர்ஓ உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட நில உடமையாளர்கள். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் இனம் நில விவசாயிகள், குத்தகையாளர்கள், வீடு, மனை உரிமையாளர்கள் இயக்கம் சார்பில் இனாம் ஒழிப்பு சட்டத்தின் வாயிலாக பெற்ற ரயத்துவாரி பட்டாவை கருத்தில் கொள்ளாமல், டிஆர்ஓ பிறப்பித்த சட்ட விரோத உத்தரவை ரத்து செய்யும் வரை காத்திருக்கும் போராட்டத்தில் மேற்கண்ட அமைப்பை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் உள்ள தனியார் திருமண மண்டப வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது, இனாம் செட்டில்மெண்ட் பட்டாவை கொடுத்த போதிலும், முழுமையாக கட்டிய வரி ரசீதை கொடுத்த போதிலும், கிராம நிர்வாக அலுவலர் சம்பந்தப்பட்ட நபரின் அனுபவத்தை உறுதி செய்த போதிலும், பட்டா சம்பந்தப்பட்ட நபரின் பெயரில் இருந்த போதிலும், இவை அனைத்தையும் கருத்தில் கொள்ளாமல், இனாம் சட்டங்களின்படி முறையாக பெற்ற உரிமையை, முற்றிலுமாக குறிப்பிடாமல் இனாம் ஒழிப்பு சட்டங்களுக்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லை என்பது போல, நில உடமையாளர்களுக்கு எதிரான உத்தரவை பிறப்பித்த மாவட்ட வருவாய் அலுவலர் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Next Story