ஹிரோஷிமா, நாகாசாகி அழிவு நினைவு தினம்

ஹிரோஷிமா, நாகாசாகி அழிவு நினைவு தினம்
சிங்கம்புணரியில் நாகா சாகி ஹிரோஷிமா அணுகுண்டு அழிவை நினைவு கூறி, உலக அமைதியை வலியுருத்தி பதாகைகளை ஏந்தி அமைதி ஊர்வலம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தனியார் மெட்ரிக் பள்ளி சார்பாக ஜப்பான் ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு பேரழிவுக்கு எதிரான அமைதி ஊர்வலம் நடைபெற்றது இந்த அமைதி ஊர்வலத்தில் அமைதியான உலகிற்கு அணுகுண்டு போர் வேண்டாம் என்பதை வலியுறுத்தும் பதாகைகளை கையில் ஏந்தி ஊர்வலம் நடத்தினர் இந்த ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பொதுமக்களின் கவனத்தை பெற்றனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த அமைதி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியே வலம் வந்து பேருந்து நிலையத்தில் நிறைவு பெற்றது. இதில் பள்ளி முதல்வர் கௌரி சாலமன், தலைமையேற்றார். தாளாளர்கள் செந்தில்குமார் சந்திரசேகர் முன்னிலை வகிக்க பள்ளி ஆசிரியர்களுடன் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்
Next Story