ஆட்சிஸ்வரர் கோயிலில் ஆடிப்பூரத்தையையொட்டி வளைகாப்பு விழா

X
செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் நகரில் தொண்டை நாட்டு சிவ ஸ்தலங்களில் ஒன்றானதும் சைவ சமய குறவர்களால் பாடல் பெற்றதுமான அருள்மிகு இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடிப்பூரத்தன்று அம்மனுக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்த ஆண்டு வளைகாப்பு விழா காலை மங்கள இசை உடன் விழா தொடங்கியது மாலை சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து,பக்தர் ஒருவரால் வழங்கப்பட்ட ரூபாய் 16 லட்சம் மதிப்பிலான அம்மனுக்கான வெள்ளி கவசம் அணிவிக்கப்பட்டு அம்மனுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேள தானங்கள் ஒலிக்க வளைகாப்பு நிகழ்வு நடத்தப்பட்டது.இந்த நிகழ்வில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story

