விவசாயம் செழிக்கவும் மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் முளைப்பாரி திருவிழா

விவசாயம் செழிக்கவும் மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் முளைப்பாரி திருவிழா
திருப்பாச்சேத்தி அருகே விவசாயம் செழிக்கவும் மக்கள் ஒற்றுமையுடன் வாழ, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாரி சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்
சிவகங்கை மாவட்டம், திருப்பாச்சேத்தி அருகே உள்ள தஞ்சாக்கூர் கிராமத்தில் அழகிய மீனாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம் முளைப்பாரி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த மாதம் 29ஆம் தேதி தொடங்கியது அதனைத் தொடர்ந்து கிராமத்தினர் முளைப்பாரி வளர்க்கத் தொடங்கினர் தினந்தோறும் இரவு தஞ்சாக்கூரில் உள்ள முளைக்கொட்டு திண்ணையில் பாரம்பரிய முறைப்படி பெண்கள் மற்றும் சிறுமிகள் கும்மி பாட்டு பாடியும் ஆடியும் சிறுவர்கள் பெரியவர்கள் ஒயிலாட்டம் ஆடியும் அம்மனை வழிபட்டனர். நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கவும் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறவும் கிராம மக்கள் ஒற்றுமையுடன் வாழவும் இந்த முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. சுமார் 100க்கும் மேற்பட்ட முளைப்பாரிகளை பெண்கள் மற்றும் சிறுமிகள் புத்தாடைகள் நகைகள் அணிந்து ஊர்வலம் சுமந்து சென்று அழகிய மீனாள் கோவில் வைத்து வழிபட்டு அப்பகுதியில் உள்ள குளத்தில் கரைத்தனர்
Next Story