நெசவாளர் தின கொண்டாட்டம்
Komarapalayam King 24x7 |8 Aug 2024 12:28 PM GMT
குமாரபாளையத்தில் நெசவாளர் தினம் கொண்டாடப்பட்டது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தேவாங்கர் முன்னேற்ற பேரியக்கம் சார்பில் நெசவாளர் தினம் கொண்டாடப்பட்டது. நகர தலைவர் ஜெகதீசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில வர்த்தக அணி துணை செயலர் வீரேந்திர பிரகாஷ் பங்கேற்று பேசினார். இவர் பேசியதாவது: உண்ண உணவு, உடுக்க உடை, வாழ்வதற்கு வீடு, இந்த மூன்றும் தான் ஒவ்வரு மனிதனுக்கும் அத்தியாவசிய தேவை. இதில் உடை தயாரிக்கும் பணியை இறைவன் நமக்கு கொடுத்து உள்ளார். இந்த பணியை நிறைவாக செய்து தனது கொண்டு உள்ளோம். தற்போதுள்ள நவீன முறைகளை வைத்து ஜவுளி உற்பத்தி தொழிலை மேம்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் பேசினார். நெசவாளர் தினத்தையொட்டி நெசவு தொழில் செய்யும் நபர்கள் 50கும் மேற்பட்டோருக்கு சேலைகள், வேட்டிகள் வழங்கப்பட்டன. நிர்வாகிகள் மாவட்ட துணை செயலர் புஷ்பநாதன், நகர செயலர் சிவகுமார், மாவட்ட மகளிரணி தலைவர் தேவிகா, நகர துணை தலைவர் சவுண்டப்பன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story