கரூரில், அரசு விருந்தினர் இல்லம் அருகே டூவீலர்கள் மோதிய விவகாரத்தில் தகராறு.
Karur King 24x7 |8 Aug 2024 1:01 PM GMT
கரூரில், அரசு விருந்தினர் இல்லம் அருகே டூவீலர்கள் மோதிய விவகாரத்தில் தகராறு.
கரூரில், அரசு விருந்தினர் இல்லம் அருகே டூவீலர்கள் மோதிய விவகாரத்தில் தகராறு. கரூர், வடக்கு நரசிம்மபுரம் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பாரத் வயது 20. இவர் நாம் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் ஜூலை 29ஆம் தேதி மாலை 6:30-மணி அளவில், பாரத் தனது டூவீலரில் கரூர் நகரப் பகுதிக்குள் சென்று கொண்டிருந்தார்.அப்போது, அரசு விருந்தினர் இல்லம் அருகே சென்ற போது, அதே சாலையில் கரூர் நரசிம்மபுரம் 2-வது கிராஸ் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகள் மனோரஞ்சிதம் என்பவர் மற்றொரு டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது, பாரத் ஓட்டிய டூவீலர் மனோரஞ்சிதம் ஓட்டிய டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் அறிந்த பாலகிருஷ்ணன் பாரத்தை தகாத வார்த்தை பேசி கைகளால் தாக்கியுள்ளார். இதில் இடது கையில் காயம் அடைந்த பாரத், கரூர் ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பாரத் அளித்த புகார் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஜூலை 30ஆம் தேதி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தகாத வார்த்தை பேசி, கைகளால் தாக்கி காயம் ஏற்படுத்திய பாலகிருஷ்ணனை ஆகஸ்ட் 6-ம் தேதி கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து, காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர் கரூர் மாநகர காவல் துறையினர்.
Next Story