வெள்ளியணை அருகே டூவீலரில் சென்றவர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து.
Karur King 24x7 |8 Aug 2024 1:21 PM GMT
வெள்ளியணை அருகே டூவீலரில் சென்றவர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து.
வெள்ளியணை அருகே டூவீலரில் சென்றவர் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து. கரூர் மாவட்டம், வெள்ளியணை, வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பன் வயது 58. இவர் ஆகஸ்ட் 4ஆம் தேதி இரவு 8:30 மணி அளவில், கரூர் - திண்டுக்கல் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். இவரது வாகனம் வெள்ளியணை இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அதே சாலையில் திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள டி. கூடலூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ்குமார் வயது 27 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டாட்டா ஏஸ் வாகனம், கருப்பன் ஓட்டிச் சென்ற டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலர் உடன் கீழே விழுந்த கருப்பண்ணனுக்கு இடுப்பு மற்றும் இடது கால் முட்டியில் பலத்த காயங்கள் ஏற்பட்டதால், உடனடியாக அவரை கரூரில் உள்ள ராஜ் ஆர்த்தோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, கருப்பன் அளித்த புகாரின் பேரில்,சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், tata ace வாகனத்தை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ராஜேஷ் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story