கோழிக்கால் நத்தம் பகுதியில் மக்களுடன் முதல்வர் நிகழ்வு
Tiruchengode King 24x7 |8 Aug 2024 1:30 PM GMT
கோழிக்கால் நத்தம் பகுதியில் மக்களுடன் முதல்வர் நிகழ்வு
தமிழக முதல்வர் மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக சென்று சேரும் வகையில் அதிகாரிகளை ஓரிடத்தில் வரவைத்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான மனுக்களை பெற்று 30 நாட்களுக்குள் தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது இந்நிலையில் இரண்டாம் கட்டமாக ஊரகப்பகுதிகளுக்கும் இந்த திட்டம் சென்றடையும் வகையில் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஆங்காங்கே மக்களுடன் முதல்வர் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது அதன்படி இன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஓ.ராஜாபாளையம்,கருமாபுரம்,திருமங்கலம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கோழிக்கால் நத்தம் மகளிர் குழு கட்டிடத்தில் பெற்றது அரசின் 14 துறைகள் ஒரே இடத்தில் அமைக்கப்பட்டு அங்கு பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டு அவர்களது மனுக்களை ஆன்லைன் முறையில் பெற்றுக் கொள்ளப்பட்டது இந்த மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் தீர்வு காணப்பட்டு உரிய விளக்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.முகாமில் மகளிர் கடனுதவி கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் உத்தரவுகள் வழங்கப்பட்டன இந்த நிகழ்ச்சியில் மண்டல நகர அமைப்பு திட்ட குழு உறுப்பினர் மதுரா செந்தில் கலந்து கொண்டு பேசும் போது தமிழக முதல்வர் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார் அந்த வகையில் அரசு அதிகாரிகள் உங்களை நாடி வந்து மனுக்களை பெற்று 30 நாட்களுக்குள் அதற்கான தீர்வை ஏற்படுத்தி கொடுக்க இருக்கின்றனர் என்று கூறினார் இந்த நிகழ்ச்சியில் மகளிர் திட்ட கடனுதவி 25 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு அனுமதிகள் வழங்கப்பட்டது மாலை 3 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சுஜாதா தங்கவேல், அட்மா தலைவர் வட்டூர் தங்கவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்
Next Story