பரமத்தி அருகே அனுமதியின்றி கள் இறக்கும் போராட்டம் எச்சரித்து அனுப்பிய போலீசார்.
Paramathi Velur King 24x7 |8 Aug 2024 1:40 PM GMT
பரமத்தி அருகே உள்ள கோனூரில் அனுமதியின்றி கள் இறக்கும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்
பரமத்திவேலூர், ஆக.8-நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் அருகே உள்ள கோனூரில் சட்டியை தலையில் வைத்து அனுமதியின்றி கள் இறக்க முயன்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர். கீரம்பூர் அருகே உள்ள கோனூர் ஊராட்சிக்கு உட்பட்ட தென்னந்தோப்பில் தென்னை மரத்தில் கள்ளு கட்டி கள்ளு இறக்கும் போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுசாமி தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தில் தென்னை விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய் எண்ணெய் விலை வெளி சந்தையில் அவ்வப்போது அதிக விலைக்கு விற்பனையாகி வருகிறது. தேங்காய் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்த கோரியும், கள்ளுக்கடையை திறக்க கோரியும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழ்நாடு விவசாய சங்கம் தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்து வருகிறது. ஆனால் தமிழக அரசு தென்னை விவசாயம் நலம் கருதி கள்ளுக்கடை திறக்க இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. கள் இறக்க நீதிமன்ற அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்த நிலையில் தமிழக அரசு இது வரை அரசாணை வெளியிட வில்லை. ஆகையால் உடனடியாக தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள்ளுக்கு உண்டான தடையை நீக்கி தமிழக முழுவதும் கள்ளுக்கடை திறக்க அரசு அனுமதிக்க வேண்டும். மதுக்கடைகளை மூடவில்லை என்றால் மது கடைகளுக்கு பூட்டு போட்டு சீல் வைத்து தடை விதிப்போம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து கள் இறக்கும் போராட்டத்தில் தலைவர் வேலுசாமி உட்பட ஏராளமான விவசாயிகள் தலையில் பானையை வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து தென்னை மரத்தின் கள் இறக்க முயன்றவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story