பாலத்துறை அருகே நடந்து சென்ற முதியவர் மீது டூவீலர் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.

பாலத்துறை அருகே நடந்து சென்ற முதியவர் மீது டூவீலர் மோதி விபத்து. முதியவர் படுகாயம்.
பாலத்துறை அருகே நடந்து சென்ற முதியவர் மீது டூவீலர் மோதி விபத்து. முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகா, அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் வயது 60. இவர் ஆகஸ்ட் 6 ஆம் தேதி மதியம் 1:30 மணி அளவில், கரூர் - சேலம் சாலையில் வேலாயுதம்பாளையம், பாலத்துறை பகுதியில் நடந்து சென்றார். அப்போது நாமக்கல் மாவட்டம், மோகனூர், தெற்கு தெருவை சேர்ந்த பிரகாஷ் வயது 41 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர்,நடந்து சென்ற ஈஸ்வரன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நிலை தடுமாறி சாலையில் விழுந்த ஈஸ்வரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால், உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த ஈஸ்வரனின் மகன் பொன்னுச்சாமி வயது 32 என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பிரகாஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story