அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைபர் கிரைம் எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி
Komarapalayam King 24x7 |8 Aug 2024 1:44 PM GMT
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சைபர் கிரைம் எனும் இணைய குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக. சைபர் கிரைம் எனும் இணைய குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் ரேணுகா தலைமை வகித்தார். கணினி அறிவியல் துறைத்தலைவர் நிர்மலா தேவி சைபர் கிரைம் எனும் இணைய குற்றம் குறித்து மாணவ, மாணவரிடையே பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இவர் பேசியதாவது: கணினிகளை குறிவைக்கும் சைபர் கிரைமினல்கள் சாதனங்களை சேதப்படுத்த அல்லது வேலை செய்வதை நிறுத்த தீம்பொருளால் பாதிப்படைய செய்யலாம். அவர்கள் தரவை நீக்க அல்லது திருட தீம்பொருளைப் பயன்படுத்தலாம். பயனர்கள் இணையதளம் அல்லது நெட்வொர்க்கைப் பயன்படுத்துவதைத் இணையக் குற்றவாளிகள் தடுக்கலாம். ஒரு வணிக நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மென்பொருள் சேவையை வழங்குவதைத் தடுக்கலாம், இது சேவை மறுப்பு தாக்குதல் என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் மற்றும் கணிதத்துறைத்தலைவருமான ரமேஷ்குமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார். வணிகவியல் துறைத்தலைவர் இரகுபதி, வணிக நிர்வாகவியல் துறைத்தலைவர் சரவணாதேவி, தமிழ்த்துறைத்தலைவர் ஞானதீபன், இயற்பியல் துறைத்தலைவர் அனுராதா, ஆங்கிலத்துறைத்தலைவர் பத்மாவதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story