கந்தசாமி கண்டர் கல்லூரி ஆசிரியர்கள் கருப்பு நிற உடை அணிந்து காத்திருப்பு போராட்டம்.
Paramathi Velur King 24x7 |8 Aug 2024 1:58 PM GMT
பரமத்தி வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகள் வழியுறுத்தி கருப்பு நிற உடை அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமத்தி வேலூர்,ஆக.8- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அரசு உதவி பெறும் கந்தசாமி கண்டர் கல்லூரியில் பணியாற்றும் கல்லூரி ஆசிரியர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தரக்கோரி தமிழக முதலமைச்சர் , உயர்கல்வி அமைச்சர் ஆகியோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று கருப்பு சட்டை அணிந்து கண்டன காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மண்டல செயலாளர் சரவணன் தலைமை வகித்தார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க மாநிலச் செயலாளர் கிருஷ்ணராஜ். வரவேற்றார் கிளைப் பொருளாளர் வெங்கடேசன், கிளைச் செயலாளர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 60-க்கும் மேற்பட்ட கல்லூரி பேராசிரியர்கள், பேராசிரியைகள் கலந்து கொண்டனர். இந்த போராட்டம் வரும் ஒன்பதாம் தேதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.
Next Story