முதல்வர் வருகையை முன்னிட்டு கோவையில் போக்குவரத்து மாற்றம்!
Coimbatore (south) King 24x7 |8 Aug 2024 2:48 PM GMT
மாற்று பாதைகளை பயன்படுத்த கொள்ள பொதுமக்களுக்கு வேண்டுகோள்.
நாளை தமிழக முதல்வர் அவர்கள் கோவை அரசு கலைக் கல்லூரியில் தமிழ் புதலவன் திட்டத்தை துவக்கி வைத்து உக்கடம் உயர் மட்ட மேம்பாலத்தை திறக்க உள்ளார்.முதல்வர் வருகையை முன்னிட்டு கோவை மாநகர காவல் ஆணையர் அவர்கள் தலைமையில் நான்கு காவல் துணை ஆணையர்களின் மேற்பார்வையில் 19 உதவி ஆணையர்கள்,45 காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 1941 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுளளனர்.நகரில் உள்ள தங்கும் விடுதிகள், ஹோட்டல்கள் ஆகியவற்றில் ஆய்வாளர்கள் தலைமையிலான குழுக்கள் தணிக்கையிலும்,நகரில் அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து காவல் பிரிவு அணியினர் வாகனத் தணிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். முதல்வர் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அவினாசி சாலை வழியாக முதல்வர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வாகனங்கள் வர இருப்பதால் பொதுமக்கள் அவினாசி சாலையில் செல்வதை தவிர்த்து கீழ்க்கண்டவாறு மாற்றுப்பாதைகளைப் பயன்படுத்தி கொள்ள பொதுமக்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது. காந்திபுரம் மேட்டுப்பாளையம் சாலை மற்றும் 100 அடி சாலையிலிருந்து அவிநாசி சாலை வழியாக ஈரோடு,சேலம் செல்லக்கூடிய வாகனங்கள் சத்தி ரோடு கணபதி,சரவணம்பட்டி வழியாக காளப்பட்டி ரோடு,காளப்பட்டி 4 ரோடு வழியாக வீரியம்பாளையம் ரோடு, தொட்டிபாளையம் பிரிவு வழியாக அவிநாசி சாலையை அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். பொள்ளாச்சி,பாலக்காடு பகுதியிலிருந்து ஒப்பணக்காரவீதி பூமார்க்கெட் சிந்தாமணி. D.B ரோடு வழியாக மேட்டுப்பாளையம் செல்லும் அனைத்து வாகனங்களும் உக்கடம் சந்திப்பிலிருந்து இடது புறம் திரும்பி பேரூர் புறவழிச்சாலை, செல்வபுரம் உயர்நிலைப்பள்ளி. சிவாலயா சந்திப்பு. ராமமூர்த்தி ரோடு, சொக்கம்புதூர் வழியாகவும் அல்லது செட்டிவீதி,சலீவன் வீதி காந்திபார்க் சந்திப்பிலிருந்து இடதுபுறம் திரும்பி லாலிரோடு சந்திப்பு.GCT சந்திப்பு,கோவில் மேடு. தடாகம் ரோடு இடையர்பாளையம் சந்திப்பை அடைந்து வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். ராமநாதபுரம் மற்றும் சுஙகம் பகுதியிலிருந்து CMC மருத்துவமனை, பெரியகடை வீதி, டவுன்ஹால் வழியாக பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி செல்லும் வாகனங்கள் சுங்கம், வாலாங்குளம் சந்திப்பு, உக்கடம் சந்திப்பு, கரும்புக்கடை, ஆத்துப்பாலம் வழியாக பாலக்காடு மற்றும் பொள்ளாச்சி ஆகிய இடங்களுக்கு செல்லலாம். மேலும் காலை 06.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை கோவை மாநகர எல்லைககுள் கனரக வாகனங்களை இயக்க அனுமதி கிடையாது எனவும் போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்களும்,வாகன ஓட்டிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Next Story