கோரிக்கையை வலியுறுத்தி பி.டி.ஓ., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்:

கோரிக்கையை வலியுறுத்தி பி.டி.ஓ., அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்:
எலச்சிபாளையம் பி.டி.ஓ.,அலுவலகம் முன்பாக, 2001ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் சான்றுகள் வழங்க வேண்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எலச்சிபாளையம் யூனியன், கோக்கலை எளையாம்பாளையத்தில் சட்ட விதிகளுக்கு மாறாக இயங்கும் கல்குவாரியில் தடை செய்ய வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியிலுள்ள சிவக்குமார் மற்றும் ராமாயி கல்குவாரிகளை சுற்றி 300 மீட்டருக்குள் உள்ள வீடுகள் மற்றும் வீட்டுமனைகள் உள்ள விபர சான்றுகள் வழங்க வேண்டும் என கடந்த 5மாதத்திற்கு முன்பு அப்பகுதி மக்கள் எலச்சிபாளையம் பி.டி.ஓ., அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். அளிக்கப்பட்ட மனுவின் மீது இதுவரையில் உரிய ஆவணங்கள் தரவில்லை. மேலும், 300 மீட்டருக்குள் உள்ள அங்கீகாரம் பெற்ற திருமுருகன் நகர் பெயரை இணைக்காமல் சான்று வழங்கிருப்பதை திருத்தம் செய்து, கோக்கலை ஊராட்சி மூலம் கடந்த 2001மே31ல் ஊராட்சி மன்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி, அங்கீகரிக்கப்பட்ட திருமுருகன் நகர் பெயரை இணைத்து தர வேண்டும் என வலியுறுத்தி நேற்று, எலச்சிபாளையம் பி.டி.ஓ., அலுவலகம் முன்பு ஆர்பாட்டம் நடந்தது. போராட்ட ஒருங்கிணைப்பாளர் கே.பழனிவேல் தலைமை வகித்தார். தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் இரா.சா.முகிலன், சமூக செயல்பாட்டாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், ஒன்றிய செயலாளர் கே.எஸ்.வெங்கடாசலம். குழு உறுப்பினர் பழனியம்மாள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி உட்பட 100க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் வட்டார வளர்ச்சி அலுவலர் லோகமணிகண்டனிடம் மற்றும் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஜெயசுதாவிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story