காங்கயத்தில் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

காங்கேயம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க விவசாயிகள் முற்றுகை
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் திருப்பூர் சாலையில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தில் கீழ்பவானி கால்வாயில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை எதிர்த்து கீழ் பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு மனு அளித்தனர். கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமை தாங்கினார். கீழ்பவானி பிரதான கடைமடை மங்கலப்பட்டி பிரிந்து பிளக்கபாளையம் கிளை வாய்க்கால் மஞ்சுனூர் கிளை வாய்க்கால் மற்றும் ஆலம்பாளையம் கிளை வாய்க்கால் ஆகியவற்றில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி கான்கிரீட் தடுப்பு சுவர் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் மீது நீர்வளத்துறை பொய் வழக்கு கொடுத்ததை திரும்ப பெற கோரியும் கால்வாயில் கான்கிரீட் சுவர் அமைக்க கூடாது என்று வலியுறுத்தியும் பொதுப்பணித்துறை அலுவலகத்தில் விவசாயிகள் சுமார் 4 மணி நேரம் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு கீழ்வானி பாசன திட்ட உதவி செய்ய பொறியாளர் சதீஷ்குமார் மற்றும் குமரேசன் ஆகியோரிடம் மனு அளித்தனர். பின்னர் விவசாயிகள் வெள்ளகோவில் காவல் நிலையத்திலும், காங்கேயம் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
Next Story