சங்ககிரியில் கோட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கூட்டம்....

சங்ககிரியில் கோட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கூட்டம்....
சங்ககிரி: வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கூட்டம்....
சேலம் லம் மாவட்டம், சங்ககிரியில் கோட்ட அளவிலான நுகர்வோர் பாதுகாப்பு குழுக்கூட்டம் சங்ககிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்டாட்சியர் லோகநாயகி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சேலம் மாவட்ட உபயோகிப்பாளர் உரிமைக்கழகத்தின் மாவட்டத்தலைவர் இளமுருகன் இக்கூட்டத்தில் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இ,சேவை மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும், சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உழவர் சந்தை அமைக்க வேண்டும், சங்ககிரி நகர் பகுதிகளில் சாலையில் உள்ள வேகத்தடைகளுக்கு வெள்ளை வர்ணம் அடிக்க வேண்டும், தேவூர் பேரூராட்சிக்குட்பட்ட காணியாளம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகில் அடிக்கடி விபத்து நடைபெறுவதால் அப்பகுதியில் வேக தடுப்பு அமைக்க வேண்டும், சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட வி.என்.பாளையம் கழுகுமேடு செல்லும் பிரிவிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை தெருவிளக்குகள் அமைத்து தர வேண்டும், புதிய பேருந்து நிலையத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும், பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள சேலம் பேருந்து நிறுத்தம் பகுதியில் பயணிகள் நிழற்கூடை அமைக்க வேண்டும், வட்டாட்சியர் அலுவலகம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பயணிகளுக்காக கழிப்பிட வசதி ஏற்படுத்தி தரவேண்டும், சங்ககிரி நகர் பகுதியில் புதிதாக ஆவின்பால் விற்பனை நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதே போல் சேலம் மண்டல நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் செயலாளர் கே.சம்பத் இக்கூட்டத்தில் எடப்பாடி பேருந்து நிலையத்திலிருந்து வெள்ளாண்டிவலசு பேருந்து நிறுத்தம் வரை சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும், எடப்பாடி அரசு மருத்துவமனை முன்புறத்தில் உள்ளஆக்கிரமிப்பு கடைகளை அகற்றப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளித்துள்ளார். இதில் சங்ககிரி,எடப்பாடி வருவாய்த்துறை அலுவலர்கள், மின்வாரியம், நெடுஞ்சாலைத்துறை, பேரூராட்சி அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நுகர்வோர் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
Next Story