புரட்சி பாரதம் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்

செங்குன்றத்தில் புரட்சி பாரதம் கட்சியின் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் புரட்சி பாரதம் கட்சியின் ஒருங்கிணைந்த திருவள்ளூர் மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி தலைமையில் நடைபெற்றது இதில் கேரளா மாநிலம் வயநாட்டில் இயற்கை சீற்றத்தில் உயிரிழந்தவர்களுக்கும் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்ததற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டு பின்னர் முக்கிய தீர்மானங்கள் இயற்றப்பட்டது பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் காவல்துறை ஆரம்பத்தில் சுணக்கமாக இருந்தாகவும் காவல்துறை அதிகாரியை மாற்றிய பிறகு தற்போது வழக்கு விறுவிறுப்பாக வேகமாக நடைபெற்றுக் கொண்டு வருவதாகவும் சட்டமன்ற தேர்தல் நடைபெற 24 மாதங்கள் உள்ள நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தல் கூட்டணி நிலைப்பாடு குறித்து தெரிவிக்கப்படும் என்றும் தேசிய கட்சியின் தலைவர் வழக்கறிஞர் ஆம்ஸ்ட்ராங் அவருக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் சாதாரண மக்களுக்கு எந்த அளவிற்கு பாதுகாப்பு இருக்கும் மக்கள் அரசியல் தலைவர்கள் அனைவரையும் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்பதை நினைவூட்ட விரும்புவதாகவும் ஒருவாரம் மக்கள் மழை காரணமாக அவதிப்பட்டார்கள் இது குறித்து ஏற்கனவே வெள்ளை அறிக்கை கேட்டுள்ளார்கள் அனைத்து கட்சியினரும் மழை பாதிப்புகளை தடுக்க ஒதுக்கிய பணம் என்ன ஆகியது என கேள்வி கேட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
Next Story