மாட்டு அம்மைக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்
Komarapalayam King 24x7 |9 Aug 2024 8:37 AM GMT
குமாரபாளையம் அருகே மாட்டு அம்மைக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே மாட்டு அம்மைக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.மாடுகளுக்கு மாட்டு அம்மை நோய் வராமல் தடுக்க, ஆண்டுதோறும் கால்நடைத்துறை மூலம் மாடுகளுக்கு தடுப்பூசி போடுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு கோடைக்காலம் முடிந்த நிலையில், மாட்டு அம்மை வராமல் தடுப்பதற்காக, கால்நடைத்துறை சார்பில், குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, கல்லங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம் பகுதியில் மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இது குறித்து கால்நடை டாக்டர் செந்தில்குமார் கூறியதாவது: ஆண்டுதோறும் மாடுகளுக்கு மாட்டு அம்மை தடுப்பூசி போடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான தடுப்பூசி போடும் பணி துவங்கி நடந்து வருகிறது. மாடுகள் இருக்கும் இடம் சென்று தடுப்பூசி போட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். இந்த தடுப்பூசி நல்லாம்பாளையம், சின்னாயக்காடு, வீ.மேட்டூர், சத்யா நகர், உள்ளிட்ட பல பகுதிகளில் போடப்பட்டது.
Next Story