ராமநாதபுரம் பொதுமக்கள் கோரிக்கை மனு

ராமநாதபுரம் பொதுமக்கள்  கோரிக்கை மனு
ஆதிதிராவிடர் மயானத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மனு.
பரமக்குடி அருகே நெல்மடூர் கிராமத்தில் பயன்பாட்டில் உள்ள ஆதிதிராவிடர் மயானத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே நெல்மடூர் பஞ்சாயத்திற்கு உட்பட்டு இந்திரா நகர் காலனி உள்ளது. இந்திரா நகர் காலனியில் சுமார் 300 குடும்பங்களைச் சேர்ந்த 1750 நபர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வசித்து வரும் பகுதிக்கு அருகாமையில் ஆதிதிராவிடர் சமுதாயத்திற்கு சொந்தமான மயானம் உள்ளது. இந்த மயானத்தை 42 வருடங்களாக பயன்படுத்தி வருகின்றனர். ஆதி திராவிட நலத்துறை மற்றும் பழங்குடியின நலத்துறை சார்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மயானத்தில் காத்திருப்போர் கூடம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்திரா நகர் காலனி மக்கள் சுமார் 42 ஆண்டுகளாக இந்த மயானத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் மயானத்திற்கு அருகில் செயல்படும் முதியோர் இல்லம் சார்பில் நீதி நீதிமன்றத்தில் ஆதிதிராவிடர் மயானத்தை அகற்றக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்திரா நகர் காலனி மக்கள் ஆதிதிராவிட மக்களுக்கு பாத்தியப்பட்ட மயானத்தை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து இன்று பரமக்குடி சார் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரங்கராஜு விடம் இந்திரா நகர் காலனி மக்கள் மன அளித்தனார். மனு குறித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story