ராமநாதபுரம் தமிழ் புதல்வன் தொடக்க விழா
ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி கூட்டரங்கில், இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் மாணவர்களுக்கு வங்கி பற்று அட்டைகளை வழங்கிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் தமிழ் புதல்வன் திட்ட துவக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அமைச்சர் ராஜ கண்ணப்பன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்' என குறிப்பிட்ட போது, சற்று தாமதித்து இப்போது கூறக்கூடாது எதிர்வரும் 19ஆம் தேதியிலிருந்து தான் அவர் துணை முதல்வர் என கூறினார்.
Next Story





