கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பரஸ்பர நிதிகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கம்

கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பரஸ்பர நிதிகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கம்
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் பரஸ்பர நிதிகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் பற்றிய கருத்தரங்கம்
கே.எஸ்.ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை வணிகவியல் துறை, இளநிலை வணிக கணினி பயன்பாட்டியல் துறை, இளநிலை வணிகவியல் (நிதி சந்தையியல் பகுப்பாய்வு) துறை மற்றும் பிர்லா சன் லைஃப் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம், ஸ்ட்ராட்டிக் கல்வி, பயிற்சி பிரைவேட் லிமிடெட் இணைந்து பரஸ்பர நிதிகள் மற்றும் தொழில் வாய்ப்புகள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் மா.கார்த்திகேயன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். இதில் கல்வி நிறுவனங்களின் தலைமை திட்ட நோக்க அதிகாரி முனைவர் எஸ். பாலுசாமி மற்றும் கல்லூரியின் துணை முதல்வர், இயக்குனர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இளநிலை இரண்டாமாண்டு வணிகவியல் (நிதி சந்தையியல் பகுப்பாய்வு) துறையைச் சார்ந்த எஸ். ஜனனி வரவேற்புரை வழங்கினார். இக்கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக இயக்குனர் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி, ஸ்ட்ராட்டிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், தியாகராஜன் பாலசுப்ரமணியன், மற்றும் மூத்த ஆசிரியை ஹேமலதா ஆகியோர் கலந்துகொண்டு மூலதன சந்தை மற்றும் பரஸ்பர நிதிகளின் பயன்பாடுகளை மாணவர்கள் எவ்வாறு பெறவேண்டும் என்றும், பரந்த தொழில் வாய்ப்புகளை மாணவர்கள் பெற்று பயனடைவது பற்றியும் மற்றும் தொழில் நுட்ப வணிகத்தில் நாட்டின் வளர்ச்சி மற்றும் அதன் பயன்பாடுகள், நோக்கங்கள் குறித்தும் எடுத்துரைத்தனர். இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் 70 பேராசிரியர்கள் கலந்து கொண்டு சான்றிதழ்களை பெற்றனர். இறுதியாக இளநிலை இரண்டாமாண்டு வணிக கணினி பயன்பாட்டியல் துறையைச் சார்ந்த எஸ் தீபிகா நன்றியுரை வழங்கினார். இதில் துறைத்தலைவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.
Next Story