தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தேனி மாவட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி தொடங்கி வைத்தார்.

தமிழ்ப் புதல்வன்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கோயமுத்தூரில் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இத்திட்டத்தை துவக்கி வைத்து மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான வங்கிப் பற்று அட்டை வழங்கினார். ஆண்டிபட்டி அருகே கானா விலக்கு பகுதியில் அமைந்துள்ள தேனி அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கில் ஆட்சியர் ஷஜீவனா தலைமையில் நடந்த இந்நிகழ்வில், தேனி மாவட்டத்தில் உயர்கல்வி பயிலும் 491 மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் பெறுவதற்கான வங்கிப் பற்று அட்டை வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் எம்.எல்.ஏக்கள், கம்பம் - இராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி - மகாராஜன், பெரியகுளம் - சரவணக்குமார் உள்பட பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
Next Story