ஸ்ரீ.பிடாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால்குடம் காவடி எடுப்பு விழா!

பக்தி
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே வாரைவளர் வாராப்பூர் நாட்டைச் சேர்ந்த மாங்கோட்டை ஸ்ரீ.பிடாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால்குடம் காவடி எடுப்பு விழா நடைபெற்றது இதில் 1000கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா மாங்கோட்டையில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ பிடாரி அம்மன் கோயில் உள்ளது இந்த கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அம்மனுக்கு காலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது அதனை தொடர்ந்து பரிவார தெய்வங்களான ஸ்ரீ.சித்தி விநாயகர், ஸ்ரீ.கருப்பர் ஆகிய தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. கோயில் திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் காவடி எடுத்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். மேலும் இக்கோயில் திருவிழாவில் மாங்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர் வருகை தந்த அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story