குண்டும் குழியுமாக உள்ள தார் சாலை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை!

பொது பிரச்சனைகள்
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே செங்கமேடு ஊராட்சிக்கு உட்பட்ட இன்னான் விடுதி, மணமடை, வெட்டிக்காடு செல்லும் சாலை சிதிலமடைந்து குண்டும் குழியுமாகவும் மழைநீர் நிரம்பி காணப்படுகிறது இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி குழந்தைகள் தடுக்கி விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதாகவும் இந்த சாலை அப்புறப்படுத்தி புது தார் சாலை அமைத்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்* புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் செங்கமேடு ஊராட்சிக்கு உட்பட்ட இன்னான் விடுதி, மணமடை, வெட்டிக்காடு ஆகிய கிராமங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பகுதி மக்கள் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட சிதிலமடைந்த குண்டு குழியுமான தார் சாலையை பயன்படுத்தி வருகின்றனர். கறம்பக்குடி மற்றும் காவல் நிலையம் தாலுகா அலுவலகம் பாரத ஸ்டேட் பேங்க் செல்வதற்கு இந்த குண்டுங்குழியுமான தார் சாலையில் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது பெய்த மழையால் குண்டு குழியுமான சாலையில் மழைநீர் தேங்கி செல்வதற்கு வழி இல்லாமல் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருவதாகவும் இரவு நேரங்களில் சிலர் தடுக்கி விழுந்து விபத்துக்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு நேரடி ஆய்வு மேற்கொண்டு சிதிலமடைந்த குண்டும் குழியுமான தார் சாலை அப்புறப்படுத்தி புதிய தார் சாலை அமைத்து தருமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story