பரமத்திவேல் சுற்றுவட்டாரத்தில் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜை.
Paramathi Velur King 24x7 |9 Aug 2024 4:02 PM GMT
பரமத்திவேலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி மாதம் நான்காம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.
பரமத்தி வேலூர்,ஆக.10- நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி மாத நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் சிறப்பு அலங்காரமும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள அங்காள பரமேஸ்வரி, பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், பகவதி அம்மன், கரூர் மெயின் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன், மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவிலில் உள்ள பொன்னாச்சியம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், அய்யம்பாளையம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், வடகரையாத்தூர் மாரியம்மன், பரமத்தி அங்காளம்மன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி நான்காவதுவெள்ளியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பெண் பக்தர்கள் மற்றும் ஆண் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Next Story