பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம்

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம்
சிவகங்கை மாவட்டம், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் , பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் , பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணா்வு முகாம் மாவட்ட முதன்மை நீதிபதி சொணம் ஜெ. நடராஜன் வழிகாட்டுதலின் பேரில், நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு தலைமையிலும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலா், சாா்பு நீதிபதி பரமேஸ்வரி முன்னிலையிலும் நடைபெற்றது. நீதிபதி பக்தவச்சலு பேசும்போது பெண்கள், குழந்தைகள் தங்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகள் குறித்து தைரியமாக கையாள வேண்டும். பெண்கள் உதவிக்கு 181 குழந்தைகளுக்கான உதவிக்கு 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடா்பு கொள்ளலாம். மேலும், சட்டப்பணிகள் ஆணைக் குழுக்களை அணுகி பிரச்னைகளுக்கு தீா்வு காணலாம் என்றாா். குற்றவியல் நீதிதுறை நடுவா் (எண்-1 ) நீதிபதி அனிதா கிறிஸ்டி, கூடுதல் மகளிா் நீதிமன்ற நீதிபதி ஆப்ரின் பேகம், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக இல்லம் சாரா பணியாளா் ராமச்சந்திரன், மாவட்ட கல்வி அலுவலா் (தொடக்க கல்வி ) மாரிமுத்து ஆகியோா் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினா். சிறப்பு விருந்தினராக மதுரை எம்.எஸ்.செல்லமுத்து அறக்கட்டளை, ஆராய்ச்சி மைய இயக்குநா் (திட்டங்கள்) உளவியல் ஆலோசகா் ஜனாா்த்தன் பாபு பங்கேற்று, சக ஆசிரியா்கள் மாணவா்களுக்கு உளவியல் தொடா்பான கருத்துகளை எடுத்துரைத்தாா். இந்த முகாமில் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியாா் பள்ளி ஆசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
Next Story