அரசு கல்லுாரியில் தமிழ் புதல்வன் திட்டம் துவக்க விழா
Thirukoilure King 24x7 |10 Aug 2024 4:55 AM GMT
விழா
கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தமிழ் புதல்வன் திட்டம் துவக்க விழா நடந்தது. விழாவிற்க, மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள் தலைமை தாங்கினார். சின்னசேலம் ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் முனியன் வரவேற்றார். அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில், 6 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ்மொழியில் பயின்று, மேற்படிப்புக்காக கல்லுாரியில் சேர்ந்த மாணவர்கள் தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 1,000 ரூபாய் பெறுவதற்கான வங்கி பண பரிவர்த்தனை அட்டை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம், மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, துணைச் செயலாளர் காமராஜ், பிரதிநிதிகள் முருகேசன், பெரியசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் தமிழ்மணி, ராஜேஸ்வரி, ஒன்றிய துணைச் செயலாளர் சோளமுத்து, ஊராட்சி தலைவர்கள் அனு, மல்லிகா, கவிதா, துறைத் தலைவர்கள் மோட்சஆனந்தன், தர்மராஜா, முருகானந்தம், வீரலட்சுமி, உமா உட்பட பலர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.
Next Story