ஆடி அம்மன் தொகுப்பு ஆன்மிக பயணம் தொடங்கியது

X
தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகமும், இந்து சமய அறநிலைத்துறையும் இணைந்து பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களில் தரிசனம் செய்யும் வகையில் ஆடி அம்மன் தொகுப்பு சுற்றுலா பேருந்துகளை கடந்த ஜூலை 17ஆம் தேதி முதல் இயக்கி வருகின்றன. சென்னை, தஞ்சை, கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மண்டலங்களை தலைமையிடமாகக் கொண்டு ஆடி மாத அம்மன் திருக்கோயிலுக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொள்ள விரும்பும் மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்ட பயணத்தில் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், சுசீந்திரம் ஒன்னுவிட்ட நங்கையம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், குழித்துறை சாமுண்டியம்மன் கோயில் ஆகிய கோயில்கள் அடங்கும். ஏற்கனவே 3 வார ஆடி வெள்ளிக் கிழமைகளில், இந்த சுற்றுலாப் பயணம் முடிந்து, நிறைவு பெற்றது. கன்னியாகுமரியில் இருந்து 38 பக்தா்களுடன் இந்தப் பயணத்தை கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்களின் அறங்காவலா் குழுத்தலைவா் பிரபா ஜி.ராமகிருஷ்ணன், திருநெல்வேலி மண்டல இணை ஆணையா் கவிதா பிரியதா்ஷினி, சுசீந்திரம் இணை ஆணையா் பழனிக்குமாா் ஆகியோா் இணைந்து கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.
Next Story

