குரும்பகேரி கிராமத்தில் சுடுகாடு சீர் செய்ய கோரி சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு!

குரும்பகேரி கிராமத்தில் சுடுகாடு சீர் செய்ய கோரி 50 க்கும் மேற்பட்டோர்சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு!
திருப்பத்தூர் மாவட்டம் குரும்பகேரி கிராமத்தில் சுடுகாடு சீர் செய்ய கோரி 50 க்கும் மேற்பட்டோர்சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு! திருப்பத்தூர் மாவட்டம் குரும்பகேரி ஊராட்சிக்கு உட்பட்ட குரும்பகேரி கிராமத்தில் சுமார் 80 க்கும் மேற்ப்பட்ட குருமன்ஸ் இனமக்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதி மக்கள் மூன்று தலைமுறையாக சுடுகாடு பயன்படுத்தி வந்துள்ளனர் இந்த கிராமத்தில் ஊராட்சி நிருவாகம் சிலமாதங்களுக்கு முன்பு கழிவு நீர் கால்வாய் அமைத்து வரும் கழிவு நீர் மற்றும் மழைநீர் ஆகியவற்றை சுடுகாட்டில் திருப்பி விடப்பட்டு தண்ணீர் தேங்கி சடலங்கள் தண்ணீரில் மிதக்குவதாக குற்றசாட்டு முன் வைக்கின்றனர் அதுமட்டுமின்றி மழைநீர் கழிவு நீரால் தொற்று நோய் ஏற்ப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர் ஊராட்சி நிருவாகத்திடம் பலமுறை கூறியும் கிராம சபை கூட்டத்தில் பலமுறை கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென்று ஜலக்காம் பாறை பகுதியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் 50 க்கும் மேற்பட்ட வர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர் தகவல் தெரிந்து வந்த கிராமிய போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட வர்களிடம் ஊராட்சி நிறுவாகத்திடம் கூறி கழிவு நீரை அப்புறப்ப படுத்த நடவடிக்கை எடுக்க நடவடிக்கை எடுப்பதாக கூரியதின் அடிப்படையில் மறியலை கைவிட்டு சென்றனர் அப்பகுதி மக்கள் கூறுகையில் எங்கள் கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் அமைத்து எங்கள் சுடுகாட்டில் கழிவு நீர் மற்றும் மழை நீர் தேங்கி சடலங்கள் மிதப்பதாக கூறுகின்றனர் துர்நாற்றம் வீசி குழந்தைகள் மற்றும் முதியவர்கள்நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது மழைநீர் கழிவு நீர் அப்புறப்படுத்தி வழிவகை செய்து தர கோரிக்கை முன் வைக்கின்றனர் சாலை மறியலால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது பேட்டி_ மீனா அப்பகுதி மக்கள்
Next Story