இராசிபுரம் பேருந்துநிலைய மீட்பு கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்..

இராசிபுரம் பேருந்துநிலைய மீட்பு கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்..
X
இராசிபுரம் பேருந்துநிலைய மீட்பு கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்..
கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை காலை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் பேருந்து நிலையத்தை அணைப்பாளையத்திற்கு மாற்றும் திட்டத்தை கைவிடக்கோரியும் நகர்மன்ற தீர்மானத்தை ரத்து செய்ய கோரியும் பலகட்ட போராட்டங்களை நடத்தியும் மாவட்ட நிர்வாகமும், மாநில நிர்வாகமும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து கடந்த 31/7/24 அன்று உண்ணாவிரதம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததால் நீதிமன்ற அனுமதியுடன் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தை அடுத்து 7/8/24 அன்று நகர்மன்ற உறுப்பினர்களிடம் மனு அளிக்கும் போராட்டமும் ஆகஸ்ட் 15 வீடு தோறும் கருப்புக்கொடி கட்டி மத்திய ,மாநில, அரசுகளின் கவனத்தை இராசிபுரம் நகரத்தை நோக்கி திருப்பவும் மாவட்ட நிர்வாகத்தை உறக்கத்திலிருந்து எழுப்புவோம் என்று கூட்டமைப்பு இராசிபுரம் மக்களிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று கடந்த 7/8/24 அன்று மனுகொடுக்கும் போரட்டம் வெற்றிகரமாக நடத்திய மக்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் இராசிபுரம் பேருந்து நிலைய கூட்டமைப்பு தெரிவித்துக் கொண்டனர். ஐந்தாம் கட்ட போராட்டமான ஆகஸ்ட் 15 கருப்புக்கொடி வீடுதோறும் கட்டுவதற்கு வருகிற 12/13.8.24 இரண்டுநாட்கள் வீடுவீடாக சென்று மக்களிடையே பிரச்சாரம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது. வீடு தோறும் துண்டறிக்கையும் வழங்குவது என முடிவெடுக்கப்பட்டது. இராசிபுரம் நகரம் முழுவதும் வீடுதோறும் கருப்புக்கொடி கட்ட இராசிபுரம் பேருந்து நிலைய மீட்பு கூட்டமைப்பு வேண்டுகோள் விடுக்கிறது..
Next Story