திரிவேணி  சங்கமம்  பகுதிகளில் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு 

திரிவேணி  சங்கமம்  பகுதிகளில் கலெக்டர்  நேரில் பார்வையிட்டு ஆய்வு 
X
கன்னியாகுமரி
கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா, இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்-               கன்னியாகுமரி அய்யன் திருவள்ளுவர் சிலையில்  (Illumination of ayyan thiruvalluvar statue with laser technology)  தொழில்நுட்ப திட்டத்தினை செயல்படுத்த ரூ.11.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு  ஒளிரும் விளக்குகள் மற்றும் நிகழ்ச்சிகளை கண்டுகளிக்குமாறு அமைக்கப்பட்டுள்ளது.          மேலும் திருவள்ளுர் சிலையில் இருந்து விவேகானந்தர் பாறைக்கு செல்லுவதற்கு அமைக்கப்பட்டு வரும் கண்ணாடி இழை கூண்டு பாலம் தூண்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறித்து துறை சார்ந்த அலுவலர்களிடம் கேட்டறியப்பட்டது.  அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்குட்பட்ட சுற்றுலாப் பயணிகள் கூடும் இடமான திரிவேணி சங்கமம் பகுதிகளை ஆய்வு செய்து கடலில் குளிக்கும் பகுதியில் அமைந்துள்ள கல் படிக்கட்டுகளில் உருவாகும் பாசிகளை தினசரி கழுவி சுத்தம் செய்ய துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.         கடற்கரை பகுதிகள்,  திரிவேணி சங்கமம் பகுதிக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் உலகத்தரத்தில் சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.   என தெரிவித்தார்.     நடைபெற்ற ஆய்வுகளில் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் காமராஜ், உதவி சுற்றுலா அலுவலர் கீதா,  கன்னியாகுமரி பேரூராட்சி செயல் அலுவலர் லிசி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story