பயிர்கள் பயிரிட வேளாண் துறை அறிவிப்பு

பயிர்கள் பயிரிட வேளாண் துறை அறிவிப்பு
அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் எண்ணெய் வித்து பயிர் சாகுபடியை அதிகரிக்க உரங்கள், மருந்துகள் மற்றும் இடுபொருட்கள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார் செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயிகள் நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்து பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். மத்திய, மாநில அரசு நிதியுதவியுடன் நிலக்கடலை, எள் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களின் சாகுபடி பரப்புகளை விரிவுபடுத்திடவும், உற்பத்தியை அதிகரிக்கவும் பல்வேறு இனங்களில் வேளாண் இடுபொருட்களுக்கான மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தேசிய எண்ணெய் வித்து இயக்கம் திட்டத்தின்கீழ், இந்த ஆண்டில் நிலக்கடலை, எள் மற்றும் ஆமணக்கு சாகுபடிக்கு தேவையான தரமான விதைகள், மண்ணின் வளத்தினை பெருக்கும் நுண்ணுாட்டக் கலவை, உயிரி உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் உயிர் பூச்சிகொல்லிகள் போன்ற இடுபொருட்கள் 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கி, பயிர் விளைச்சலை பெருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story