மலைநாச்சி அம்மனை தரிசனம் செய்ய சாரை சாரையாக வந்த பக்தர்கள் கூட்டம்
Sivagangai King 24x7 |10 Aug 2024 7:57 AM GMT
சிங்கம்புணரி அருகே பிரான்பட்டியில் நான்காவது ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மலைநாச்சி அம்மன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த மலைநாச்சி அம்மனை தரிசனம் செய்ய சாரை சாரையாக வந்த பக்தர்கள் கூட்டம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் புழுதிபட்டி அருகே பிரான்பட்டியில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகில் சக்திவாய்ந்த மலைநாச்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மலைநாச்சி அம்மன் வடக்கு பார்த்த முகமாக அருள்பாலிக்கிறார். மலைநாச்சி அம்மன் கேட்ட வரம் தந்தருள்வதால் இந்த பகுதி கிராம மக்கள் மத்தியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆடி மாதத்தில் அம்மனை எப்படி வேண்டினாலும் அம்மனின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை, குறிப்பாக வெள்ளி மற்றும் செவ்வாய்கிழமைகளில் சிறப்பு பூஜைகளும் சிறப்பு அலங்காரமும் நடைபெறும், அதன் அடிப்படையில் நான்காவது ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மின்னொளியில் மலைநாச்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மலைநாச்சி அம்மன் மலர் அலங்காரத்தில் சந்தனகாப்பில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அம்மனின் தரிசனம் பெற சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இரவு என்றும் பாராமல் வந்த வண்ணம் உள்ளனர். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை என்பதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி புழுதிபட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story