பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வு

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வு
வெண்ணந்தூர் வட்டாரத்தில் பள்ளி மேலாண்மைகுழு மறுகட்டமைப்பு நிகழ்வு நடந்தது.
குழந்தைகளின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 மற்றும் தமிழ்நாடு குழந்தைகளின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட விதிகள் 2011 அடிப்படையில் அனைத்து வகை அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-ஆம் ஆண்டில் பள்ளி மேலாண்மைக் குழுக்கள் மறுகட்டமைப்ப செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போதைய உறுப்பினர்களின் பதவிக் காலம் 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடையும் நிலையில் அரசுப் பள்ளிகளில் 2024–-26 ஆண்டுகளுக்கான பள்ளி மேலாண்மைக் குழுவானது புதிய உறுப்பினர்களைக் கொண்டு கட்டமைப்பு செய்யப்பட உள்ளது. முதல்கட்டமாக இன்று 10.08.2024 சனிக்கிழமை வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட 17 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஜனநாயக முறைப்படி நடைபெற்றது. மறுகட்டமைப்பு நிகழ்வில் சுமார் 240 பெற்றோர்கள், 56 முன்னாள் மாணவர்கள்(பெற்றோர் மற்றும் பொது) பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். 17 பள்ளிகளுக்கும் தலா ஒரு பெற்றோர் வீதம் 17 பெற்றோர்கள் பள்ளி மேலாண்மைக் குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டனர். வெண்ணந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட நெ3 கொமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்த பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு நிகழ்வினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி ப.மகேஸ்வரி அவர்கள் பார்வையிட்டார். பள்ளியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கு துணை நிற்கவும், குழந்தைகளின் தரமான கல்வியை உறுதி செய்யவும் மற்றும் நமது அரசு பள்ளியை அனைத்து வகையிலும் மேம்படுத்திடவும் பள்ளி மேலாண்மைக் குழுவின் பணியானது மிக முக்கியமானது என எடுத்துரைத்தார். இந்நிகழ்வின் போது துணை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், வட்டார கல்வி அலுவலர் வளர்மதி அவர்கள், ஆசிரியர் பயிற்றுநர் சுரேந்திரன், தலைமையாசிரியர் சிவகாமி அவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர் உடனிருந்தார்கள்.
Next Story