சங்ககிரி அருகே டேங்கர் லாரியில் கசிந்த வாய்வால் பரபரப்பு

சங்ககிரி அருகே டேங்கர் லாரியில் கசிந்த வாய்வால் பரபரப்பு
சங்ககிரி: தேங்காய் லாரியில் கசிந்த வாய்வால் பரபரப்பு...அசம்பாவிதம் தவிர்ப்பு...‌
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த டேங்கர் லாரியில் திடீரென வாயு கசிந்ததால் பரபரப்பு.... திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுனர் இசக்கிபாண்டி (36). இவர் கர்நாடகா மாநிலம் தாவணிக்கரை பகுதியிலிருந்து டேங்கர் லாரியில் சிஓ2 என்ற குளிர்பானத்திற்கு பயன்படுத்தும் வாயுவை ஏற்றிக் கொண்டு கோவை அத்திப்பாளையம் நோக்கி சென்றார். அப்போது சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே சின்னாக்னகவுண்டனூர் சேலம்,கோவை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரியின் பின் பகுதியில் வெண்ணிற புகையுடன் சப்தம் வருவதை கண்ட லாரி ஓட்டுனர் இசக்கி பாண்டி அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக லாரியை அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாத சர்வீஸ் சாலையில் நிறுத்தினார். இதனையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சங்ககிரி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் டேங்கர் லாரியில் பெரும் விபத்து ஏற்படாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். டேங்கர் லாரி ஓட்டுனரின் சாமர்த்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story